திருப்புகழ் என்பது முருகப்பெருமானின் புகழையும்,  வல்லமையும், கருணையும், அழகையும்,அவன் குடிகொண்டிருக்கும் கோவில்களையும் அவனின் இணை பிரியா வள்ளி தெய்வயானையையும், சக்தி வாய்ந்த   வேலையும் மயிலையும்சேவலையும் போற்றும் பாடல்கள் ஆகும்.  அது  மட்டும் அல்ல; திருப்புகழ் ஒரு ஞானகளஞ்சியமாக விளங்குகின்றன.  அதிலிருந்துஞானமாகியமுத்துக்களையும் பெறலாம் என்கிறார்கள்முனிவர்கள்.  வேதங்கள்உணர்த்திய அரிய கருத்துக்களை, இதிகாசபுராணங்கள் எடுத்துரைக்கும் நெறிகளை, ஆதி சங்கரர் அருளியஅத்வைதசித்தாந்தத்தை, ஸ்ரீ ரமண பகவான் காட்டிய ஆத்மஞான வழியை,மற்றும் பல சாஸ்திரங்கள்எடுத்துரைக்கும்அரிய தத்துவங்கள்திருப்புகழில்அங்கங்கேகாண முடியும்.  எல்லாவற்றிற்கும் மேலாக சைவசித்தாந்தத்தின் உயர்ந்த கருத்துக்கள் திருப்புகழில்எங்கும் பரவி கிடைப்பதை காணலாம்.திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, வேல்,மயில், சேவல் விருத்தங்கள்,திருவெழுகூற்றிருக்கை என்ற அருணகிரிநாதரின்அனைத்து படைப்பிலும்சைவசித்தாந்த கருத்துக்கள் ஒளி வீசுவதைகாணலாம்.  “திருப்புகழில் ஒரு சில பாடல்கள் மட்டுமே சைவசித்தாந்த கருத்து இல்லாத பாடல்கள் என்றுகூட சொல்லலாம்” என்றார் ஒருவர்.

சைவ சமய சான்றோர்களால் இறைவனை உணர்ந்து அவனை அடைவதற்கான வழிமுறையை எடுத்துரைப்பது சைவ சித்தாந்தம்.  திருஞானசம்பந்தர் பாடிய முதல் மூன்று தேவாரம், திருநாவுக்கரசர் பாடிய நான்கு, ஐந்து, ஆறு தேவாரம், சுந்தரர் பாடிய தேவாரம் மற்றும் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் அனைத்திலும் சைவசித்தாந்த கொள்கைகள் பரவி கிடக்கின்றன. ஒழுக்கம், அன்பு, அருள், அறிவு போன்ற உயர்ந்த நெறிகளை நிலை நாட்டுவதுசைவ சித்தாந்தம்.

சமயம் வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் சமயமே வாழ்க்கை, வாழ்க்கையே சமயம் என்ற தன்மையில் நிற்பது சைவ சித்தாந்தம்.  சைவ சித்தாந்தம் உணர்த்தும் முதன்மையான பொருள்கள் மூன்று.  அவை: பதி, பசு,  பாசம்.  பதி என்ற சொல் இறைவனைகுறிக்கின்றது.  பசுவாவது உயிர் அல்லது ஆன்மா. சீவான்மா என்றும் சொல்லப்படும்.  பாசமாவது உயிர்களை பிணைத்திருக்கும் கட்டு.        இவை மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று வந்ததல்ல.  ஒவ்வொன்றும் வேறுபட்டவை.  இம்மூன்றில் பதியே உயர்ந்த பொருளாகும்.

இளமையிலேயே தேவாரம், திருமந்திரம் திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களை படித்து அதன் கருத்தை உணர்ந்து வந்தார் அருணகிரிநாதர்.  திருஞானசம்பந்தரைப் போலவே  தானும் பாடல்கள் பல பாட வேண்டும் என்று  முருகனிடம்வேண்டினார்.  ‘புமியதனில் பிரபுவான,புகலியில் வித்தகர் போல, அமிர்தக்கவி பாட,  அடிமை எனக்கு அருள்வாயே” என்று முருகனிடம்வேண்டுகிறார் ஒரு திருப்புகழில்.    சைவசித்தாந்தகொள்கைளை நன்கு உணர்ந்து அக்கருத்துக்களை அடிப்படையாக வைத்து,முருகபிரானின் அருள்பெற்று திருப்புகழை திருப்புகழை இயற்றினார் அவர்.  சித்தாந்த கொள்கைகள் மேலோங்கி நிற்கும் பல திருப்புகழ் பாடல்கள் உள்ளன. “உலகத்தில் உயிர், பாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலிருந்து, உற்றார் உறவினர் என்ற பந்தத்தில் இருந்து விடுபட்டு, மதி நிலைகெடாமல், உனது திருவருளைத்தந்தருள்வாயாக” என்கிறார் ஸ்ரீ அருணகிரிநாதர்,”உலகபசுபாசதொந்தம்அதுவான” என்ற பழனி திருப்புகழில்.                “கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை, கசடு அறவேறு வேறு செய்து அருள்வாயே” என்கிறார்.  அதாவது “நற்கதி பெறுவதற்காக, தன்னிகரற்ற கடவுள், உயிர், தளை (கட்டு) எனப்படும் இம் மூன்றின் இலக்கணங்களை ஐயம் இல்லாத வகையில் தனித்தனியாக விளக்கி எனக்கு அருள்புரிவாயாக” என்கிறார் “இரு குழை மீது தாவடிஇடுவன” என்று தொடங்கும் திருப்புகழில்.  “பசு, பதி, பாசம் (உயிர், இறைவன், தளை) என்ற முப்பொருள்களின் இலக்கணங்களை எனக்கு விளக்கி அருள்வாய்” என்கிறார் “புவி புனல் கலுங்காட்டி” என்று தொடங்கும் திருவாலங்காடு திருப்புகழில்.  “பசுபதி  சிவாக்யம் உணர்வோனே என்கிறார் “வசனமிக வேற்றி மறவாதே” என்று தொடங்கும் பழனி திருப்புகழில்.  திருப்புகழில் மட்டுமல்ல, கந்தரலங்காரம் கந்தர் அனுபூதி  வேல் மயில், சேவல் விருத்தங்கள் அனைத்திலும் சைவசித்தாந்த கருத்துக்கள் நிறைந்துள்ளன.

ஒருகாலத்தில் சமணமதம்  மதுரையில் மேலோங்கி நின்றது.  மதுரையை ஆண்டுவந்த பாண்டியன் கூட சமணமதத்தில் சேர்ந்தார்.  சமணர்களுடைய கொடுமைக்கு ஆளாகி இறைவன் அருளால் மீண்டவர் திருநாவுக்கரசர்.  கோள் நிலை சரியாக இல்லாததால் இந்நிலை வந்திருக்ககூடும் என்றார் நாவுக்கரசர்.  “இல்லை, இறைவனின் அருள் இருந்தால் நவகோள்களால் தீமை விளையாது” என்றுரைத்தார் சம்பந்தர்.சைவசித்தாந்தத்தை நிலை நிறுத்த, பல்வேறு சிவத்தலங்கள் சென்று, அவன் புகழை பாடி, பிறகு சமணர்களுடைய ஆதிக்கத்தை முறியடிக்க மதுரை வந்து சேர்ந்தார் .

திருநீறு தரித்த சிவனடியார்கள் சூழ மதுரையில் வந்த திருஞானசம்பந்தரை கண்டு சமணர்கள் மனம் கலங்கினார்கள்.  பாண்டிய மன்னர் கொடும் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயம் அது.    பாண்டிய மன்னரின் நோயைகுணப்படுத்த எங்களால் முடியும் என்று சமணர்கள் வந்தனர்.  அவர்கள் முறைப்படி மயிற்பீலியால் மன்னரின் உடலில் தடவினர்.  ஆனால், நோய் கூடியதே தவிர குறையவில்லை.   மயிற்பீலி எரிந்து போகும் அளவுக்கு மன்னரின் உடலில் வெப்பம் இருந்தது. சமணர்கள் கமண்டல நீரை எடுத்து தெளித்த போது மன்னரின் எரிச்சல்   மேலும் கூடியது.  இந்த அவமானத்தால் வாய் அடைத்து போய் பயந்து நின்ற  அவர்களை வெளியே போக சொல்லி, மன்னர் அமைச்சரிடம் ஞானசம்பந்தரை அழைத்து வரும்படி கட்டளை இட்டார்.  திருஞானசம்பந்தரும் வந்து திருநீர் பதிகம் பாடி மன்னரின் நோயை தீர்த்துவைத்தார்.

சம்பந்தபெருமானுடைய பெருமை நாடெங்கும்  ஒளிவீசுவதை கண்டு பொறாமை அடைந்தார்கள் சமணர்கள்.   “அவர் நோய் குணப்படுத்தினார் என்றதால் அவரது சமயம் உண்மையாகாது” என்றார்கள்.  “சமயம் வேறு மருத்துவம் வேறு”என்றார்கள்.  தரப்பினரும் அவரவர் சமய கருத்துக்களே பெரிது என்று வாதம் செய்ய, சான்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.  “இரண்டு கருத்துக்களையும் ஓர் எட்டில் எழுதி நெருப்பில் இடவேண்டும்.  “எது தீக்கு இரையாகாமல் இருக்கிறதோ அதுவே உண்மை என்று எடுத்து  கொள்ளலாம்” என்றார்கள்.  அரசரும் ஆமோதித்தார். தீருநள்ளாற்றிலேபாடிய தன்னுடைய தேவாரஏடுகளில் ஒன்றை நெருப்பில் இட்டார்சம்பந்தர்.  சமணர்களும் தங்கள் சமய உண்மைகளை எழுதி நெருப்பில் இட்டார்கள்.  அது சாம்பலானது.  சம்பந்தரின் ஏட்டு முன்னைவிடபோலிமையுடன்வெளியே வந்தது. “சமணர்களை வெற்றிகொண்ட திருஞானசம்பந்தராகஅவதரித்த முருகா,உனது திருப்புகழை பாட அருள்புரிவாய்”  என்கிறார்  “மூல மந்திர  மோதலிங்கிலை” என்று தொடங்கும் பழனி .திருப்புகழில். ஆவினன்குடியில்குடிகொண்டிருக்கும்முருகனேதிருஞானசம்பந்தராக அவதாரம் செய்தவர் என்கிறார் அவர்.

பீலிவெந்(து) உயர் ஆலி வெந்துஅவ்அசோகு வெந்து அமண் மூகர் நெஞ்சிடைபீதி கொண்டிடவாது கொண்டு அருள் எழுது ஏடு ..

பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட,  மாறனும்பிணி தீர வஞ்சகர் பீறுவெங்கழு வேறவென்றிடுமுருகோனே …

ஆலமுண்டவர் சோதி யங்கணர் பாகமொன்றிய வாலை அந்தரி                                             ஆதி யந்தமுமான சங்கரி ..       குமரேசா …

ஆரணம்பயில்ஞானபுங்கவ சேவலங்கொடி யான பைங்கர                                                               ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் …… பெருமாளே.

சமணர்கள் சளைக்கவில்லை.  மீண்டும் வாதம் செய்தனர்.  அப்பொழுது அரசர் சொன்னார்:”யார் தோற்றார்களோ அவர்கள் தோல்வியை எப்படி ஒப்புக்கொள்வார்கள்?” என்று.  “நாங்கள் தோற்றால் இந்த மன்னன் எங்களை கழுவில் ஏற்றட்டும்” என்றார்கள் சமணர்கள்.  அனைவரையும் வைகைக்கரைக்குசெல்லுமாறு அரசர் பணிந்து, தாமும்சென்றார்.  சமணர்கள் எழுதிய பாட்டை வைகையில்விட்டனர்.  அது கடல் நோக்கி ஓடியது.  “வாழ்க அந்தணர் ” என்று தொடங்கிய திருஞானசம்பந்தர் பாட்டு எதிர் திசையில்வைகையை கிழித்துக் கொண்டு வெளியே வந்தது.  அந்த எட்டினை எடுத்து அனைவரிடமும் காட்டினார் ஒருபக்தர்.

“சமணர்களை கழுவில் ஏற்றக்கூடிய வெற்றி அடைந்து, பக்தர்களுக்கு குருநாதராக விளங்கிய முருகா உன்னை வணங்குகிறேன்” என்று அருணகிரிநாதர்‘பாட்டில் உருகிலை” என்று தொடங்கும் தீர்த்தமலைதிருப்புகழில் இப்படி பாடுகிறார்:

சீட்டையெழுதிவையாற்றிலெதிருற                                                                                                 ஓட்டி யழல் பசை காட்டி சமணரை                                                                               சீற்றமொடுக்கழுவேற்றஅருளியகுருநாதா !

சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக்கொண்டு வழிபடும் சமயம் சைவம் எனப்படும்.  அச்சைவத்தின் கொள்கையே சைவ சித்தாந்தம்.பிரம்மா விஷ்ணு, உருத்திரன் ஆகியோரையும், பிற கடவுளரையும் விட மேலானவன் சிவன் என்பது சைவசித்தாந்த கருத்து. சிவபிரானுக்கு நிகர் வேறு எவரும் இல்லை.  சைவம் என்ற சொல் சிவம் என்னும் செந்தமிழ் சொல் அடியாகப் பிறந்தது. சித்தம் என்றால் உண்மையான கருத்து; சித்தாந்தம் என்றல் உண்மையின் அந்தம் அல்லது எல்லை. சகல உயிர்களுக்கும்ஆதாரமாக விளங்கும் சிவபெருமானை துதிக்கும் பல பாடல்கள் திருப்புகழில் காணலாம்.  ‘சிவனும் முருகனும் வேறில்லை,ஒன்றே’ என்ற கருத்தை கொண்டவர் அருணகிரிநாதர்.  “பரம குருநாதா”  என்று தொடங்கும் ஒரு பாடல் முழுவதும் சிவபெருமானும்முருகனும் ஒன்றே என்ற கருத்தை சொல்கின்றன.  அருணகிரிநாதர் முருகனை நோக்கி பாடுகிறார்:

“பார்வதியின்மணவாளனாகியபெருமாளும் நீதான்,                                                                      யுகமுடிவு காலத்திற்கும்முடிவில்லாதநிலைபெற்ற                                                                சிவாநுபூதியைத் தந்த பெருமாளும் நீதான்” என்றும் சிதம்பரமாகியபொன்னம்பலத்தில்செகசோதியாக                                                                வீற்றிருப்பதும் நீதான் என்கிறார்.                                                                                             

பழனித்தலத்தைசிவமயமான பழனி என்கிறார்  “சிவமயமான நின் பழனி தமிழ் போய்” என்று சொல்கிறார் ஒரு பாடலில்.    ஐந்தெழுத்து மந்திரத்தைமாறி மாறிசெபித்துசிவவாக்கியக்அமுதைகுடியேனோ”என்கிறார் “செயசெயஅருணாத்திரி “செயசெயஅருணாத்திரிசிவயநம” என்று தொடங்கும்  திருவண்ணாமலை திருப்புகழில்.

ஒரு சிறந்த சிவபக்தனின் அடையாளங்கள் என்னென்ன ?தன்னில் எழும் இறை உணர்வை மட்டும் பற்றிக்கொண்டு உடம்பை மறந்திருப்பான் அவன்.  இதயத்தில் இறைவன் மேல்  காதல் நிறைந்திருக்கும்.   “நமசிவாய வாழ்க, நாதன்தாள்வாழ்க” என்ற சொற்கள் எப்பொழுதும் அவன் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும். அரையில் காவி உடையும், கழுத்தில் ருத்திராட்சமாலையும்அணிந்திருப்பான்.  இது அனைத்தும் இல்லை என்றாலும்அவன் நெற்றியில் திருநீறு நிறைந்திருக்கும். திருஞானசம்பந்தர்,  திருநீற்றின் சிறப்பைப்பற்றி “திருநீற்றுப்பதிகம்” பாடலில்தொகுத்து வழங்கியிருக்கிறார். கூன் பாண்டிய மன்னனின்வெப்பநோயை,   “திருநீற்று பதிகம்” பாடியே குணமடைய செய்தார் அவர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்டபின்எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு                                                                                       சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு                                                                                    தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர்வாயுமைபங்கன்திருஆலவாயான்திருநீறே!

வேதத்திலுள்ளது நீறு                                                                                                                          வெந்துயர் தீர்ப்பது நீறு                                                                                                                       போதந் தருவது நீறு                                                                                                                                 புன்மை தவிர்ப்பது நீறு                                                                                                                      ஓதத்தகுவது  நீறு                                                                                                                          வுண்மையிலுள்ளது நீறு                                                         சீதப்புனல்வயல்சூழ்ந்ததிருஆலவாயான்திருநீறே…(திருநீற்றுப்பதிகம்)

திருநீற்றின்மகிமையை  பல பாடல்களில் அருணகிரிநாதர் வலியுறுத்தியிருக்கிறார். “ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம் ஆறுமுகம் என்று   ஆறுமுறைஉரைத்து,திருநீற்றை உடலில் பூசி அணியும்  பெரும்தவசித்தர்கள் பாதம் பணிவோம்” என்கிறார்  “ஆறுமுகம்” என்று தொடங்கும் பழனி திருப்புகழில். “சிவஞான நூல்களை ஓதும் அன்பர்கள் பூசுகின்ற மகிமை வாய்ந்த திருநீறை இடாதவனும், இருவினையும்கொண்டுள்ள, அடியேனைதிருநீற்றைப்பூசவைத்து, உனது மலர்ப்பாதம் அடைய அருள்புரிவாய்முருகா” என்கிறார் அருணகிரிநாதர் “தாரணிக்கதி” என்று தொடங்கும் காசி திருப்புகழில்.

சைவசித்தாந்தகருத்துப்படி ஓர் உயிர் செய்த வினையின் பயன் அவ்வுயிரே அனுபவிக்க வேண்டும். வினையின் இயல்ப்பை பல்வேறு பாடல்களில் காரைக்கால் அம்மையார் கூறியிருக்கிறார்.  எத்தனை பிறவிகள் எடுப்பினும் செய்த வினையின் பயனை செய்தவனே அனுபவிக்கவேண்டும், எனவே ‘வினை’ வலிமையுடையது எனும்பொருளில்’வல்வினை’ எனக்க்கூறுகிறார்  அம்மையார்.    வினை காரணமாகப்  பல பிறவிகள் தொடர்ந்து வருவதால், வினை என்பது “மீளாப் பிறவிக்கடல்” என்கிறார் அம்மையார்.  இருவினை பயன்களிலிருந்து  ஆன்மா விடுதலை பெற சிறந்த வழி சிவபிரானின்பாதங்களை பற்றுவதே  என்கிறார் அம்மையார்.   பல பிறவிகளில் செய்து,  சேர்ந்திருக்கும் வினை “சஞ்சிதம்”எனப்படும். அவை நம்மை இதுவரை  அணுகவில்லை. நம்மிடம் வந்து, நம்மை தீண்ட தொடங்கிய  வினை“பிராரப்தம்” என்றும், மேலால்செய்யப்போகிற  வினைகளை“ஆகாமியம்” என்று சொல்கிறார்கள். நல் வினை தீவினை போன்ற  வினைகளிலிருந்து விலகி, செயல்கள்சுத்தமாகி, “நீ” “நான்” என்ற வேற்றுமை இன்றி வாழ அருள்புரிவாய்”   என்கிறார் அருணகிரிநாதர்” மூளும் வினை சேர” என்று தொடங்குமதிருப்புகழில்.  திருக்கரங்கள் மட்டுமின்றி, திருக்கரத்தில் ஏந்தியவேலும், மலர்ப்பாதங்களும்,  திருமேனியும் எல்லாமே சிவந்த நிறத்தில் விளங்கும் மயில்வீரனே,  வினையின்  விளைவாக  வந்த  இந்த வாழ்க்கையே  நிஜம்  என்று  நினைத்து  நான்  உழலுவது சரியோ?  என்கிறார், “மெய்யே என வெவ்வினைவாழ்வைஉகந்து” என்ற கந்தர் அனுபூதியில்

பிறப்பு இறப்பு இல்லாத ஒரு நிலை அடைவதேசித்தாந்த இலட்சியம்.  தாம் கரை சேர்வதற்குஒரே வழி சிவன் திருவடி அடைவதே என்றார் திரு மாணிக்கவாசகர்.  தாம் பல்வேறு பிறப்புகளில் பிறந்து தவித்ததாக தெரிவிக்கிறார் அவர்.

“புல்லாகிபூடாய்ப்புழுவாய்மரமாகிக்பல்விருகமாகிப்பறவையாய்ப்பாம்பாகிக்கல்லாய்மனிதராய்பேயாய்க்கணங்களாய்வல்லசுரராகிமுனிவராய்த்தேவராய்ச்செல்லாஅநின்றஇத்தாவரசங்கமத்துள்எல்லாப்பிறப்பும்பிறந்திளைத்தேன்

பல பிறவிகள் எடுத்தது போதும், உன் காலடியில் நிரந்தரமாக ஒரு இடம் தருவாயாகஎன்கிறார் அவர்.  இதே கருத்தை அருணகிரிநாதரும் பல பாடல்களில் கூறியிருக்கிறார். “எருவாய்கருவாய்” என்று தொடங்கும் திருப்புகழில் சொல்கிறார்: “கருவிலிருந்து உருவாகி, வளர்ந்து  ‘இவர்’ ‘இவர்’ என்று இருப்பவர், பிறகு மறுபடியும் ஒரு பிறப்பு எடுத்து, “அவர்’ “அவர்’ என்று அழைக்கப்படுகிறார்.  அவர் அவர் என்று பேசப்பட்டவர், மறுபிறப்பிற்கு பிறகு மீண்டும் “இவர் இவர்” ஆகிறார். ஒரு தாய் அல்ல, இரு தாய் அல்ல, பலகோடிதாய்மார்கள் சுமந்து வந்து அல்லல்படுகிறான்.

எருவாய்கருவாய்தனிலேயுருவா                                                                                                        யிதுவே பயிராய் …… விளைவாகி

இவர்போயவராயவர்போயிவரா                                                                                       யிதுவேதொடர்பாய் …… வெறிபோல

ஒருதாயிருதாய்பலகோடியதா                                                                                                   யுடனேயவமா …… யழியாதே

ஒருகால் முருகாபரமாகுமரா                                                                                                      உயிர்கா வெனவோ …… தருள்தாராய்

“ஏழு கடல்களின்கரையில் பரந்து கிடக்கும் மணலின் எண்ணிக்கையை விட  அதிகம் என் துன்பம் நிறைந்த பிறவிகள்” என்றும், “பிறைவி அலை ஆற்றினில்புகுதாதே”என்றும், மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தது போதும், உன் பாதாரவிந்தத்தில் அடைக்கலம் தருவாய் என்றும் பல பாடல்களில் முருகனிடம் கேட்கிறார் அருணகிரிநாதர். பிறப்புக்கு என்று ஏற்பட்டஉடலிலே புகுந்து, நொய்வாய் பட்டு, வினைகளினால்கஷ்டப்பட்டு,  துன்பம் நிறைந்த வாழ்க்கை போதும், உனது நளின பாதம் அடையும் பாக்கியத்தைபெறுவேனோ?” என்கிறார்” பிறவியானசடமிறங்கி” என்று தொடங்கும்  சிறுவைதிருப்புகழில்.

சேரமான்நாயனர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சிவ வழிபாடு செய்யும் பொழுது நித்தம் தில்லை நடராஜபெருமானின்சிலம்பொலியைகேட்பாராம்.  ஒருநாள் பூஜையில்சிலம்பொலி  தாமதமாக கேட்டது. ‘ஏன் தாமதம்’ என கேட்டாராம்சேராமான்நாயனர். ‘தில்லை கோயிலில் என் நண்பன் சுந்தரன் வந்து பாடிக்கொண்டிருந்தான். கேட்கும் மகிழ்ச்சியில் வர தாமதம்”என்றாராம் இறைவன். ‘யார் அந்த சுந்தரன்?’ என விசாரித்து அவரை அடைந்து இருவரும் நெருங்கிய நண்பராகிவிட்டனர்.

ஒரு நாள் கைலையீசனை நினைத்து சுந்தரர் பாடிக்கொண்டிருந்தார். அதை கேட்ட ஈசன் ‘அழைத்து வா சுந்தரனை’ என ஐராவத்தை அனுப்பி விட்டார்.சுந்தரும் அதில் ஏறி கைலைக்குப்பயணமானர். ‘எங்கே சேரமான்’ என ஒரு கணம் நினைக்க, அதை சேரமான் அறிய (பிறர் எண்ணத்தை அறியும் ஆற்றல் அவருக்குண்டு) தன் குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஒத அதுவும் அவரை ஏற்றிக்கொண்டு காற்றில் பறந்தது.  இருவரும் கைலை வந்து சேர்ந்தார்கள். அழையா விருந்தாளி சேரமான் உள்ளே செல்ல அனுமதிமறுத்ததால் சுந்தரர் மட்டும் உள்ளே சென்று இறைவனைதொழுதார். பிறகு ஒரு நல்ல நண்பனுக்கு எடுத்துக்காட்டாக, சேரமான் வெளியில் காத்திருப்பதைச்இறைவனிடம் சொன்னார்.  உடன் அவரை உள்ளே விடநந்திக்கு உத்தரவு பிறந்தது.  உள்ளே சென்ற சேரமானிடம் ஈசன்  ‘என்ன செய்துகொண்டிருந்தீர் வெளியில்”என்று கேட்க, ‘கைலை உலா பாடினேன்’என்றார்சேரமான்.  ‘இங்கு மறுபடியும் பாடும்’என்று அன்பு கட்டளை பிறந்தது இறைவனிடமிருந்து.  இந்த நிகழ்ச்சியை நாம், அனைத்து திருப்புகழ் இசை வழிபாட்டின் இறுதியில், கற்ப்பூரஹாரத்திவேளையில் கேட்டு மகிழ்கிறோம்:

-ஆதரம் பயில் ஆரூரர் தோழமைசேர்தல் கொண்டவரோடேமுன்நாளினில் ஆடல் வெம்பரிமீதேறிமாகயிலையில்ஏகி

ஆதி அந்த உலா ஆசுபாடியசேரர்கொங்குவைகாவூர் நல் நாடதில்__ஆவினன்குடிவாழ்வானதேவர்கள், பெருமாளே

திருஞானசம்பந்தர்பாடியதேவாரத்தில், ‘திருஎழுகூற்றிருக்கை’ என்ற பாடல் மிக சிறப்புடையது.எழுகூற்றிருக்கை  என்பதுசித்திரக்கவிவகையில்ஒன்றாகும்.  ஒன்று   முதல்ஏழுவரை   முறையே ஒவ்வொன்றாகஏறியும்இறங்கியும்வருமாறு ஒருதேர்போல அமைத்தபாடல்இது.  திருஞான சம்பந்தர்பாடியதேவாரபதிகங்களைஒன்று விடாமல் எல்லாபாடல்களையும் உணர்ந்து பாடிவந்தார் அவரின் தந்தை, சிவபாதஇருதயர்.  ஆனால்,  திருஞானசம்பந்தரின்பாடல்எண்ணிக்கைகூடிக்கொண்டேவர, அனைத்தையும் உருவிடமுடியவில்லையேஎன்றுவருந்தினார்தந்தை.  இதைக் கேட்டஞானசம்பந்தர் அனைத்து பாடல்களின்கருத்தையும் சேர்த்து “திருஎழுகூற்றிருக்கை” பாடினார்.  இது ஒன்றைமட்டுமே ஓதினால்அனைத்து பதிகங்களையும் ஓதிய பலன் கிடைக்கும் என்று ஆறுதல் கூறினார் சம்பந்தர்தந்தையிடம்.

  ஞானசம்பந்தர்அடிச்சுவற்றில்வந்தஅருணகிரியாருக்கும்அவரைப்போலபாடவேண்டும்என்றஅவா.  இதை  அவர் ‘புமியதனிற்பிரபுவான” என்றபாடலில்சொல்கிறார்.         இந்தபூமியில் விளங்கும் தனிப்பெரும்தலைவரும், சீர்காழியில்அவதரித்தவருமான, திருஞானசம்பந்தமூர்த்தியைப்போலமரணமிலாவாழ்வைத்,தரவல்லதேவாரப் பாடல்களைப்போன்றுநானும் பாடுதற்குஅருள்புரிவாய்” என்கிறார். சம்பந்தர் இயற்றிய தேவார திருவெழுகூற்றிக்கையைப்  போலவே தமது பதினாறாயிரம் திருப்புகழ் பாக்களையும் ஓதுகின்றபலனை, “ஓர் உருவாகிய’ என்று தொடங்கும் திருப்புகழை பாடினால்திருப்புகழ் அன்பர்களும்பெற்றுவிடலாம் என்று  கருணை கொண்டு அருணகிரியார்இயற்றியதுதிருவெழுகூற்றிருக்கை.திருவேரகமெனும் சுவாமிமலையில் பாடிய திருவெழுகூற்றிருக்கை பலசிறப்புகள்  வாய்ந்தது.    தர்பாரிகானடாராகம் அமைத்து, ஆதி தளத்தில், அருணகிரிநாதரின்இப்பாடலுக்கு உயிர் ஊட்டியிருக்கிறார் குருஜி ஸ்ரீ ராகவன் அவர்கள்.  இதன் பொருள் பின்வருமாறு.

“பிரணவம் என்ற முழு முதலாம் ஐந்துமுகச் சிவம் அறுமுகச்சிவமாகி, சக்தி, சிவம் என்ற இரண்டின்இலக்கணமும் கொண்டு சிவசக்தியிடம் பொருந்தி ஓர் உருவாகி, இளையனாய், அந்தணனாய், பிரமனை சிறைபிடித்து, பின், அரன் அரி இந்திரன் எல்லோரும் வேண்ட, பிரமனை சிறை விடுத்து, நொடிப்போதில் உலகை வலம் வந்து,   தேவசேனையை மணந்து, கணபதிக்குதம்பியாய் விளங்கி, வினைஒழிக்கும்சிவனுக்குகுருவாகி சண்முகமூர்த்தியே இவர் என்னும்படிசம்பந்தராய்சீர்காழியில் தோன்றி கார்திகைப் பெண்களுக்கு புதல்வனாய்கிரௌஞ்சமலையைப்பிளந்தவேலினை உடையனவாய்,முனிவர்கள் உன்னை போற்றி துதி செய்ய த்திருவேரகத்தில் வீற்றிருக்காய்.”    அருணகிரிநாதரின்இத்திருவெழுகூற்றிருக்கையில்முருகனின் திரு அவதாரம், நோக்கம், அருள்தன்மை, ஆகியவற்றை கூறிப்பாடியுள்ளார்.   சைவசித்தாந்தக்கருத்துக்கள்கொண்டதும்,  சொல்லலங்காரப்பாடலாகவும், தாளமும்லயமும்கொண்டஇனிமையானபாடலாகவும்அமைகிறதுதிருவெழுக்கூற்றிருக்கை.. சுவாமிமலைத்திருக்கோவில்சுவரில்இத்திருவெழுகூற்றிருக்கைவரையப்பட்டுள்ளது.

இவ்வுலக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, இறைவனை  நேசித்து, அவனையே நினைத்து அவன் துதி பாடி, அவன் அருளைநாடும் பாக்கியம் எல்லோர்க்கும் கிடைப்பதில்லை.  அவன் அருளால் தான் அவன் தாள் அடையமுடியும் என்கிறார் ஸ்ரீ மாணிக்கவாசகர். இறை அருள் பெறுவதால்இப்பிறவியின் இலட்சியம் முழுமை அடைகிறது.  தான் எதோ பெற வேண்டும் அல்லது எதோ அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள் சிலர்.  மாணிக்கவாசகர் தனக்கு எதுவும் வேண்டாம், அருள் ஒன்றே போதும் என்கிறார்.  “வேண்டேன் புகழ், வேண்டேன் செல்வம், வேண்டேன்விண்ணும்மண்ணும், சிவனின் அருள் ஒன்றே போதும் என்கிறார்.   இறைவன் அருள் மழை பொழிந்து கொண்டே இருக்கிறான் அந்த அருளை பெற நாம் அவனை பக்தியுடன்நாட வேண்டும்.  காதலாகிக் கசிந்துகண்ணீர்மல்கி ஓதுவார்தமைநன்னெறிக்குய்ப்பது, வேதம் நான்கினும்மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே”என்கிறார் ஞானசம்பந்தர்தமதுபாடல்“அருட்பத்தில்”. உளம் கனிந்து தான் அழைக்கும் போதுதிருச்செவிசாற்றித் தன்னை அருள்புரிந்துஏற்றுக்கொள்ள வேண்டும்  என்கிறார் மாணிக்கவாசகர்.

அருணகிரிநாதர் திருப்புகழ் அனைத்திலும்முருகபிரான்அருளைக்கோரும்விண்ணப்பமாக நாம் காண்கிறோம்.  பல பாடல்கள் “அருள்வாயே” என்றுதான் முடிகிறது.   கொங்கணகிரியில்பாடியஐங்கரனையொத்தமனம்” என்று தொடங்கும் பாடலின் அனைத்து வரிகளும் “அருள்வாயே” என்ற சொல்லோடு முடிகிறது.  “ஐம்புலம் அகற்றி, இரவு பகல் அற்ற நிலை அருள்வாய்” என்றும், “முக்தி நிலை அடைய அருள்வாய்” என்றும், “அருள் ஞானஇன்பமதுபுரிவாயே”  என்றும்  பாடுகிறார்.  முருகனின் அன்பும் அருளும் சேர்ந்து பொழிய, ஆசையாகிய சங்கிலி அறுந்துபேசா அனுபூதி பிறக்கிறது” என்கிறார் கந்தர் அனுபூதியில்.  (43)...

தூசாமணியும்துகிலும்புனைவாள்

   நேசாமுருகாநினது அன்பு அருளால்

ஆசாநிகளம்துகளாயின பின்

பேசாஅநுபூதிபிறந்ததுவே.